சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பாட்டாலியன் 12-வது சிறப்பு காவல் படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மணிமுத்தாறு பாட்டாலியன் குடியிருப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் ஆகாத விரக்தியில் தமிழ்ச்செல்வன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.