Categories
தமிழ் சினிமா

“திருமணம் ஆகி 10 நாள் கூட ஆகல”‌ அதுக்குள்ள விவாகரத்தா…..? என்ன ரவீந்தர் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…..!!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி 2 பேருக்குமே 2-வது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பற்றிய தகவல்கள் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த ரவீந்தர் தன்னுடைய விவாகரத்து பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் என் திருமண புகைப்படத்தை யாருக்கும் அனுப்பாமல் சமூக வலைதளங்களில் மட்டும் தான் வெளியிட்டேன்.

மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனால் அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சானு சொல்லி ஒரே ஒரு போட்டோ மட்டும் தான் வெளியிட்டேன். அதுக்கப்புறம் என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னோட மனைவி கேமராவுக்கு அந்த பக்கம் இருந்துகிட்டு என்ன இல்லன்னு சொல்ல சொல்ற. மகாலட்சுமி வெட்கப்படுறான்னு தான் நீங்க சொல்லணும். என்ன கேமராவுக்கு முன்னாடி வர முடியாதுன்னு சொல்றா.

உனக்காக நான் அந்த சீரியலை பார்த்தேன். என்னை பிராண்ட் பிரொமோட் பண்ண சொல்றா. அது மட்டுமா நைட் 10 மணிக்கு அன்பே வா சீரியலை பார்க்க சொல்றா. இந்த சீரியலை இன்னும் நாலு நாள் பார்த்திருந்தால் கண்டிப்பா அவள டைவர்ஸ் பண்ணி இருப்பேன். என்ன நைட்டு 10 மணிக்கு அன்பே வா சீரியல் பார்க்க வைச்சுட்டா. அந்த சீரியல் முடிஞ்ச பிறகு நைட்டு 10.30 மணிக்கு நான் லைவில் வந்திருக்கிறேன். இங்க பயங்கரமான கண்டிஷன் எல்லாம் போயிட்டு இருக்கு என்றார்.

Categories

Tech |