மதம் மாற மறுத்த காதல் மனைவியை திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் தலையை துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் வாரணாசி சேர்ந்த அகமத் என்பவர் ப்ரியா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அகமத் பெற்றோர் ப்ரியா மதம் மாறினால் மட்டுமே வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டனர். இதனால் ப்ரியாவை அகமத் மதம் மாற வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு ப்ரியா சம்மதிக்கவில்லை.
இதனால் மிகுந்த கோபம் கொண்ட அகமத் தனது நண்பரான சோயிப் என்பவரின் உதவியுடன் ப்ரியாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நண்பர்கள் இருவரும் சேர்ந்து ப்ரியாவை கொன்று அவரது தலையை தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் உடலை மட்டும் காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றனர். இதனிடையே காவல்துறையினர் விசாரணையில் பிரியாவின் குடும்பத்தினர் உதவியுடன் தலை இல்லாமல் கிடந்த சடலம் ப்ரியா என தெரிய வந்தது.
அவரது உடை மற்றும் ஷூ மூலமாக இதனை ப்ரியாவின் தந்தை உறுதிப்படுத்தினார். ஆனால் இதுவரை பிரியாவின் தலை கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் ப்ரியாவின் கணவரான அகமத் மற்றும் அவரது நண்பர் சோயிப் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.