திருச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்த மனைவிக்கு அவர் குறித்த அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லூயிஸ் விக்டர் இவரது மகன் எட்வின் ஜெயக்குமார்(36) இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக (cashier ) பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ரெஜினா (32) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மணப்பாறையில் வாழ்ந்து வந்தனர்.
திருமணமான சில நாட்களிலேயே எட்வின் ஜெயகுமார் நடவடிக்கை மீது மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. ஜெயகுமார் இரவில் நீண்ட நேரம் செல்போனிலேயே மூழ்கிருந்தது மனைவிக்கு எரிச்சலூட்டியது. இதனை தொடர்ந்து கணவரின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் ஜெயக்குமார் பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வீடியோக்கள் இருந்தது. மேலும் அவற்றில் பல ஆபாசமாகவும் இருந்தன.
இது குறித்து மனைவி ,ஜெயகுமாரிடம் கேட்டபோது ஜெயக்குமாரும், மாமியாரும் ரெஜினாவை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் மனம் உடைந்த அவர் பின்னர் தனது தந்தை மற்றும் சகோதர மூலம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஜெயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவானார்.
எனினும் அவரது ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் அதே நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.