தெலுங்கானாவில் குளியலறையில் புதுமண தம்பதியினர் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் காதர் பாக் என்னும் பகுதியில் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) என்னும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சையது சூரியா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் அவரது மனைவி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா பேட்டை பகுதியிலிருந்து ஹைதராபாத்திற்கு புதிதாக திருமணம் முடித்த இந்த தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது நேற்று இரவு தனது மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராத சந்தேகத்தினால் அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதில் புதுமண தம்பதி குளியலையில் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கின்றனர். இது பற்றி விசாரணை அதிகாரியான காவல்துறை ஆய்வாளர் எஸ் ஸ்ருதி பேசும்போது, நேற்று முன்தினம் காலையில் சம்பவம் நடைபெற்று இருக்கக்கூடும். ஆனால் அதை மாலை வரை யாரும் கவனிக்கவில்லை. அன்று இரவு 11:30 மணி அளவில் தகவல் தெரிந்து நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மனைவியை காப்பாற்ற சென்ற இடத்தில் கணவர் உயிரிழந்திருக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சையது மின்சார தாக்குதல் ஏற்பட்ட தனது மனைவியை காப்பாற்ற செல்லும்போது அதில் அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க கூடும் என தந்தை தெரிவித்துள்ளார். குளியலறையில் மின் இணைப்பு தவறுதலாக மாற்றி கொடுத்திருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.