திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தானே என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் கணவனை விட்டு பிரிந்த ஒரு பெண் ஐகோர்ட்டில் தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி கூறியதாவது. திருமணம் என்பது புது தலைமுறையை உருவாக்க தானே தவிர உடல் இன்பத்திற்கு மட்டும் இல்லை
மேலும் ஒரு குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது என்பது அந்த குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும். இது ஒரு மனிதநேயம் அற்ற செயல் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகும். எனவே 2 குழந்தைகளும் தற்காலிகமாக அவரது தாயின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.