Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் எப்போது…? முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகும் நயன் – விக்கி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!!

போடா போடி படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ்க்கு இடையில் காதல் மலர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்கி  காதலிப்பதாக  செய்திகள் வந்தது. இருப்பினும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சமூக தளங்களில் பதிவிட்ட  புகைப்படங்கள் மூலம் தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

இந்தநிலையில் கடந்த மாதம் அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாகவும் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. மேலும் தற்போது விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்துவிட்டு அஜித்தின் 62வது பட வேலைகளை தொடங்கி இருக்கிறார். மறுபக்கம் நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் நயன்தாரா ஷாருக்கானுடன் பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் அனைவரும் எப்போது திருமணம் என்று தான் கேட்டு வருகின்றனர். அதற்கு பதில்  அளித்த விக்கி நாங்கள் தற்போது வேலைகளில் பிஸியாக இருக்கிறோம். மேலும் காதலிக்கிறது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனவே எங்களுக்கு எப்போது காதல் செய்வது போர் அடிக்கின்றதோ  அப்போது திருமணம் செய்துகொள்வோம்.  அப்படி திருமணம் செய்ய முடிவு எடுக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக அறிவிப்போம் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் விக்னேஷ் சிவன் சமூக தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிஸியான தருணத்தில் சிறிது நேரம் பிடித்தவர்களுடன் நேரம் செலவிட முடிந்தது. சென்சார் சான்றிதழுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தேன். எனவே இன்று முதல் அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கும் என நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருக்கிறார். விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் நாளை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |