தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான். அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.
இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் திருமணம் குறித்து சிம்பு பதில் அளித்துள்ளார். அதில், திருமணத்தை எப்போதும் யாரும் நிர்பந்திக்க கூடாது, திருமணத்திற்கு பிறகு சண்டை மற்றும் பிரிவு போன்றவை அதிகம் நடக்கின்றன. இதனால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. நேரம் கணியும்போது திருமணம் தானாக நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.