Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் எப்போ என கேட்கப்பட்ட கேள்வி”…. வியக்க வைக்கும் பதிலளித்த ஸ்ருதி….!!!!!!

திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் இசைக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, கலை, இசை, சினிமா மீதான ஆர்வம் தான் எனக்கும் சாந்தனுவுக்கும் இடையே நட்பு ஏற்பட காரணமாக இருந்தது. அவர் மிகவும் அன்பானவர், திறமையானவர். நான் இதற்கு முன்பாக நடிகர்களை காதலித்து இருக்கிறேன்.

அது ரொம்ப மோசம். சில நடிகைகளுக்கு அது வொர்க் அவுட் ஆகலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் முதலில் ஒரு இசைக்கலைஞர். எனக்கு பிடித்த விஷயங்களை பிடித்த நபரை சினிமா துறையில் நான் இதுவரை சந்தித்ததில்லை. நான் காதலித்த நடிகர் என்னை புரிந்து கொள்ளவில்லை. திரைத்துறையை சாராத ஒருவரை காதலித்த போது தான் என்னைப் போன்ற ஆட்கள் இருப்பதை கண்டுபிடித்து இருக்கின்றேன் என கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசனிடம் திருமணம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? விரைவில் திருமணம் செய்யும் திட்டம் இருக்கின்றதா? என கேட்டபோது அவர் கூறியதாவது, திருமணத்தை பற்றி நினைத்தாலே பயமாக இருக்கின்றது. அவசரப்பட்டு திருமணம் செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |