சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி . தற்போது இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி ‘ஏற்கனவே நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அது திருமணம் வரை சென்று கடைசியில் நின்றுவிட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறார். என் திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார் .