திருமணம் குறித்து பரவிய வதந்தி குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் விளக்கமளித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இந்த நிகழ்ச்சியில் இவரும் சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். தற்போது அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . இந்நிலையில் அஸ்வின், சிவாங்கி இருவருக்கும் திருமணம் நடந்தது போல மார்ஃப் செய்யப்பட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதா என குழப்பத்தில் இருந்தனர்.
இது குறித்து விளக்கமளித்த அஸ்வின் ‘என்னுடைய முகத்தை மார்ஃப் செய்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இது என் பெயரைக் கெடுப்பதற்காக பரப்பப்படுகிறது . நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் சிங்கிள் தான். என் கவனம் இப்போது சினிமாவில் மட்டுமே இருக்கிறது. இதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார் . இதேபோல் சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘என்னையும் எனது சக நடிகரையும் வைத்து மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் . அதை யாரும் நம்ப வேண்டாம், பகிரவும் வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.