Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் குறித்து பரவி வந்த வதந்தி”… முற்றுப்புள்ளி வைத்த மலர் டீச்சர்…!!!!

திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு சாய்பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் திடீரென திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

இந்நிலையில் சாய்பல்லவி இதுகுறித்து கூறியுள்ளதாவது, “ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றது. சாய் பல்லவி நடித்தால் அது நல்ல கதாபாத்திரமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றார்கள். நல்ல கதைக்காக காத்து கொண்டிருப்பதால் அதிக படங்களில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. இதை வைத்து திருமணம் செய்ய இருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை” என கூறியுள்ளார். இந்நிலையில் சாய்பல்லவி திருமணம் செய்ய இருப்பதாக பரவிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |