Categories
சினிமா

“திருமணம் குறித்து வெளியான தகவல்”…. எஸ்.ஜே.சூர்யா விளக்கம்…!!!!!!

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியுள்ளார் எஸ்ஜே.சூர்யா.

இந்த படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து நியூ என்னும் படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த நிலையில் பல படங்களில் நடிகராக நடித்து வந்த எஸ் ஜே சூர்யாவிற்கு இறைவி திரைப்படம் ஒரு நடிகராக திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மெர்சல், ஸ்பைடர், மாநாடு என பல்வேறு படங்களில் நடித்தது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றார்.

இந்த நிலையில் 54 வயதாகும் எஸ் ஜே சூர்யா இதுவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளார். அதனால் அவர்கள் குடும்பத்தார் தற்போது அவருக்கு மிக தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும்  விரைவில் எஸ் ஜே சூர்யாவிற்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள எஸ் ஜே சூர்யா கூறியுள்ளதாவது, திருமணம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை. திருமண பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இது போன்ற வதந்தி எப்படி பரவுகின்றது என தெரியவில்லை. தற்பொழுது எனது முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |