மகனின் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள உப்பூர் சத்திரத்தில் கவுரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் கவுரிநாதன் இரண்டாவதாக பூமலர் என்பரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுரிநாதனின் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் என்பவருக்கு கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்திற்கு பிரபாகரன் கவுரிநாதனை அழைக்காதததால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து விரக்தியடைந்த கவுரிநாதன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பாலைக்குடி காவல்துறையினர் கவுரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.