உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள துங்கா என்ற மாவட்டத்தில் முபசில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்தனர்.கட்டிட தொழிலாளியான அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த பின் அந்தப் பெண்ணை அந்த நபர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.