இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் பலமுறை கூறியுள்ளார்.
ஆனால் பிரகாஷ் அதற்கு மறுக்கவே இளம்பெண் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு காவல் துறையினர் பிரகாசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷுக்கு பத்து வருடங்கள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் மேற்கொண்டு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.