இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் அரவிந்த்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அரவிந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.