நடிகை மீனா ரசிகர்களுடன் உரையாடிய நேர்காணல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் உடல் உறுப்பு தான தினத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் நடிகை மீனாவின் ரசிகர்களுடனான பழைய உரையாடல் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் நடிகை மீனா ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அசத்தலாக பதில் கூறியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு, தனது கணவருடன் திருமணமான போட்டோவை பகிர்ந்து நீங்க கொஞ்சம் லேட் என பதிலளித்தார்.
உங்களின் வயது என்ன என மற்றொரு ரசிகர் கேள்வி கேட்டதற்கு பெண்களிடம் வயதை கேட்பது நாகரீகம் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா என கேட்டார். மற்றொரு ரசிகர் 20 வருடங்களுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து வந்து உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்க Awwww என பதில் அளித்துள்ளார் மீனா. மீனாவின் இந்த பழைய நேர்காணல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.