திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மூத்த மகள் அபர்ணா (19) இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கின்றார். விராட்டிப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்ற நிலையில் அவர் அபர்ணாவை காதலித்து வந்திருக்கின்றார். அபர்ணாவும் முதலில் அவரை காதலித்து பின் காதலை கைவிட்டதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் அபர்ணாவை ஹரிஹரன் வீட்டிற்கு சென்று பெண் கேட்ட நிலையில் பாண்டி தனது மகளை திருமணம் செய்து தர முடியாது என மறுத்திருக்கின்றார். இதனால் தொடர்ந்து அபர்ணாவுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்திருக்கின்றார். அபர்ணா இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய நிலையில் தன மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கின்றார் பாண்டி. அதன்படி முனீஸ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதை அறிந்த ஹரிஹரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபர்ணாவிடும் திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்திருக்கின்றார். ஆனால் அபர்ணா மறுத்ததால் கழுத்தை அறுத்தும் குத்தியும் கொடூரமாக கொலை செய்து விட்டு வெளியே தப்பிக்கும் பொழுது அபர்ணாவின் தாயாரும் சித்தப்பாவும் வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் ஹரிஹரன்.
இதையடுத்து அவர்கள் வீட்டில் சென்று பார்த்த பொழுது அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனால் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபர்ணாவின் உடலை கைப்பற்றி அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ஹரிஹரனை தேடி வருகின்றார்கள்.