அரியானா மாநிலத்தில் பகதுர்க்கர் என்ற பகுதியை சேர்ந்த சியாம் (25)என்பவர் பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சியாாமிடம் சொல்லாமல் அஞ்சலி ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதால் சியாம் தன்னை காதலிப்பதாகவே அஞ்சலி நினைத்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு அவரை மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார்.
அப்போது தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என சியாம் கூறியுள்ளார்.அதன் பிறகு அஞ்சலி பற்றி சியாமின் அத்தை விசாரித்த போது அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. அதனால் அவருக்கு திருமணம் செய்து வைக்க அத்தைக்கு மனமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி ஷியாமிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல பால் வாங்க சியாம் சென்றபோது அவரை வழிமறித்து பேசி அஞ்சலி 5 லிட்டர் கேனில் நிரம்பி இருந்த ஆசிட்டை எடுத்து சியாம் மீது ஊற்றினார். அதில் உடல் முழுவதும் பல பகுதிகளில் ஆசைப்பட்டு சியாம் கதறி துடித்தார். அதன் பிறகு அக்கா பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அஞ்சலியை போலீசார் கைது செய்துள்ளனர்.