திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு மாரியம்மன் கோவில் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜதுரையின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.