Categories
மாநில செய்திகள்

திருமணம் செய்பவர்களுக்கு… தமிழக அரசு மாஸ் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொள்பவர்கள் இனிமேல் தங்கள் ஊரிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம், 2009 பிரிவு 5(1)- ன்இப்படி திருமணம் நடைபெறும் இடத்தில் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. தற்போது இதனை எளிமையாக்கும் வகையில் திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமண பதிவினை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதனால் இனிமேல் திருமணம் செய்யும் ஜோடிகள் தங்கள் ஊரிலுள்ள சார்பதிவகத்தில் திருமண பதிவினை செய்து கொள்ளலாம்.

Categories

Tech |