திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பெருங்குடியை சேர்ந்த ஒருவர் எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டுகின்றார் என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் கூறியுள்ளதாவது, எனக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்திரசேகர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்தேன். அதை பார்த்த அவர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர் ஆத்திரமடைந்து நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் உன் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறினார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் இளம் பெண்ணை மிரட்டியது ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரிய வந்தது. பின் போலீசார் விசாரணை செய்வதற்காக அவரை காவல் நிலையத்திற்கு வரவைத்தார்கள். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்பொழுது அவளிடம் நான் என் காதலை கூறினேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
இதனால் கையில் பிளேடு கொண்டு தன்னை தானே அறுத்துக் கொண்டேன். இதை அடுத்து நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி வந்த நிலையில் அவள் என்னை நிராகரிக்க தொடங்கினாள். இதையறிந்த நான் மதுரைக்குச் சென்று விசாரித்த பொழுது அவளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரிந்தது. நான் பெண் கேட்டும் தர மறுத்தார்கள். இதனால் அந்த பெண்ணிடம் உனது புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பரப்புவேன் என மிரட்டினேன் என கூறியுள்ளார். இதனால் போலீசார் சந்திரசேகரை கைது செய்தார்கள்.