Categories
சினிமா

திருமணம் செய்யும் முன்பே கவர்ச்சி நடிகை கர்ப்பமா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி…. கடுப்பான நடிகர் அர்ஜுன் கபூர்…..!!!!

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகை ஆக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய உயிரே திரைப்படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் வாயிலாக பிரபலமானவர் ஆவார். இதனையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை சென்ற 1998 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற மகனும் இருக்கிறார். அதன்பின் கணவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2017-ம் வருடம் அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா. அதனை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகன் மற்றும் நடிகருமான அர்ஜுன்கபூர் மேல் மலைக்கா அரோரா காதல் கொண்டார். இப்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்னதாகவே கர்ப்பமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பின் கோபமான மலைக்கா, தான் கர்ப்பமாக உள்ளதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இது போன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடியிருந்தார். அத்துடன் அர்ஜுன் கபூரும் இது தொடர்பாக தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Categories

Tech |