குன்றத்தூர் அருகே காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் சிவன் கோவில் தச்சர் தெருவில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். இவர் பல கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாரை காதலித்து வந்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் அப்பெண்ணை விட்டு சதீஷ்குமார் விலகிவிட்டார். இந்நிலையில் அந்தப் பெண் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சதீஷ்குமாரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இந்த காரணத்தினால் மிகுந்த மன வருத்தம் அடைந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவத்தை பார்த்ததும் அவரின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை குறித்து அவரின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.