Categories
சினிமா

திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு…. நடிகை குஷ்பு கொடுத்த நச் பதில்….!!!

தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்நது வருகின்றர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பூ “ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார். அப்போதும் குஷ்பூவை விடாமல் அந்த ரசிகர், உங்கள் கணவர் ஏதாவது பதில் அளித்தாரா என்று கேட்டுள்ளார். அதற்கு குஷ்பூ, “துரதிர்ஷ்டவசமாக நான் அவருடைய மனைவி. அதனால் மன்னிக்கவும். அவர் விட்டுக்கொடுக்க தயராக இல்லை“ என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |