Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட சிறுமி…. அக்காள் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், உறவினரான பொன்ராஜ்(30) என்பவர் திருமணம் செய்வதற்காக சிறுமியை கரூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதற்கு சிறுமியின் அக்காள் கணவர் கணவர், பொன்ராஜின் உறவினர் ராமசாமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் போலீசார் சிறுமியை மீட்டனர். இதனை தொடர்ந்து பொன்ராஜ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |