சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 லட்ச ரூபாய் வரை வாங்கியுள்ளார். இதனையடுத்து மனோஜ் தனது காதலியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.