பல விதிமுறைகளுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனாவால் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் நடத்தப்படும் திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பின்பற்றியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவை, திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் மணப்பெண்ணை தந்தை அழைத்து வரும் பொழுது கையைப் பிடித்து அழைத்து வரக்கூடாது. மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதும் கைகளை சுத்தமாக கழுவி விட வேண்டும். திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்கலாம் அதோடு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. மணமகன், மணமகள் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.
அந்நிகழ்ச்சியில் புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி உண்டு. இசை பாடல் பாடவோ அனுமதி இல்லை. காரணம் ஒலி எழுப்பினால் பாதிரியார் திருமணத்திற்கு சம்மதமா என்பதை சத்தமாக கேட்க வேண்டிய சூழல் உருவாகும். அனுமதி அளிக்கப்பட்டாலும் இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்துடன் இத்தகைய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.