கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, அசாதாரண வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மூன்றாம் கட்டப் பரவலை எட்டும் நிலையில் உள்ளது . இந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .
மேலும் போக்குவரத்து தடைசெய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசங்கள் கட்டாயமாக அணிந்து, வெளியே வரவும் அனுமதி வழங்கியுள்ளது .
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டின் காரணமாக பயணங்கள் தடைசெய்யப்பட்டு திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத் தேவைக்காக மட்டும் இ-பாஸ்கள் வழங்கப்பட்டு, கூட்டம் கூடுவது கண்காணிப்பிற்குள் இருந்து வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில், ராஜஸ்தான் மாநிலம்,பில்வாரா மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல் அசாதாரண வகையில் திருமணம் அரங்கேறியுள்ளது .
கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தை அடுத்து, மூன்றே நாளில் மணமகன் ரிசுலின் தாத்தா காய்ச்சல் வந்து உயிரிழந்ததாக தெரிய வந்தது.பரிசோதனையில்,அவர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி இறந்தது தெரியவந்தது.இதையடுத்து,இந்த திருமண விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது .