கோர்ட் வளாகத்தில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் அஜித் (23) என்பவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் சத்யா (20) என்ற பெண்ணை அஜித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் – சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் சத்யா கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை பிறந்த பிறகு அஜித்-சத்யாவை திருமணம் செய்ய மறுத்ததால் சத்யா மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி விசாரித்த போது அஜித் தான் சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனக்கு ஜாமீன் தருமாறு கூறினார்.
இதன் காரணமாக நீதிபதி வழக்கறிஞர்கள் முன்பாக கோர்ட் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலின் முன்பாக திருமணம் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி வக்கீல்கள் முன்னிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அஜித் மற்றும் சத்யாவுக்கு திருமணம் நடந்தது. அப்போது சத்யா கையில் தன்னுடைய ஆண் குழந்தையை வைத்திருந்தார். இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு அஜித் நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து நீதிபதி அஜித்துக்கு ஜாமீன் வழங்கியதோடு தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தார். மேலும் சத்யாவுக்கு பிறந்த குழந்தைக்கு கபிலன் என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் கோர்ட் வளாகத்தில் திடீரென திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.