Categories
மாநில செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

தெலுங்கானாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண் ஸ்ரீவாணி. இவருக்கு வரும் 13 ஆம் தேதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் திடீரென்று நேற்று சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீவாணி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஸ்ரீவாணி குணமடைந்து வீடு திரும்புவார் என்று மணமகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திடீரென்று நிகழ்ந்த அவரின் மரணத்தால், குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்ததோடு, சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

Categories

Tech |