Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் பற்றி கூறிய நடிகை டாப்ஸி”… என்ன சொன்னாரு தெரியுமா…???

நடிகை டாப்ஸி திருமணம் குறித்து கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இவர் பேட்மிட்டன் வீரரான மதியாஸ் போவை காதலித்து வருகின்றார். இவர் திரையுலகை சாராத ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணியிருந்த நிலையில் அதுபடியே தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, என் கெரியரில் துவக்கத்திலேயே எனக்கு ஏற்ற நபரை சந்தித்து விட்டேன். நாங்கள் காதலிக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்ட போதும் கலாச்சாரப்பகிர்வு இன்னும் அழகாக இருக்கிறது என்றார்.

மேலும் இவர் திருமணம் குறித்து கூறியுள்ளதாவது, என் சுருட்டை முடியை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். பயங்கரமாக மேக்கப் போடும் மணப் பெண்களை பார்க்கும் போது பாவமாக இருக்கின்றது எனவும் திருமண புகைப்படங்களில் வேறு யாரோ ஒருவர் இருப்பது போல இருந்தால் அதை பார்த்து உங்களால் எப்படி ரசிக்க முடியும், அந்த நினைவு ஒரு நாள் மட்டுமல்ல கடைசி வரை என்று கூறியுள்ளார். என் திருமணம் எளிமையாகவும் நான் அடையாளம் தெரியாத அளவிற்கு மேக்கப் போடாமலும் என் திருமணம் கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே நடக்கும் எனவும் ட்ராமா இல்லாத  திருமணமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |