திருமணம் முடிந்த ஆறு நாட்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் கடந்த செப். 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி இருவரும் கடந்த 12ம் விருந்திற்காக சந்தியாவின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கேயே சில நாட்கள் புதுமண தம்பதியினர் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று நடைபெற்ற விருந்திற்கு மணமகனின் பெற்றோரும் வந்தனர். இதனால் அன்று காலை சந்தியா குளித்து விட்டு வந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு பதறியடித்த குடும்பத்தினர், சந்தியாவை உடனே திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எலி மருந்து சாப்பிட்டதால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதயடுத்து இதுகுறித்து சந்தியாவின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று தன் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாப்பிள்ளை முருகன், புது மனைவி இறந்ததை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருந்தார்.
இதனால் மனமுடைந்த சந்தியாவின் கணவர் முருகன் அவரது பம்பு செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தியாவிற்கு ஏற்கனவே ஓரு இளைஞருடன் காதல் இருந்ததும், இதற்கு அவரது பெற்றோர் ஒப்புக்கொள்ளாமல் கட்டுப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சந்தியா தற்கொலை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்ட்டது. மேலும் சந்தியா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அவரது காதலனும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.