தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் இருவரும் பதில் அளித்தனர். இதனிடையே கடந்த வாரம் ரவீந்தருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அண்மையில் தல தீபாவளியை இருவரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்யும் ரவீந்தரை அதை செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டார். ஆனால் அதையும் மீறி விமர்சனத்தை தொடர்ந்து வருகிறார் ரவிந்தர். இந்நிலையில் ரவீந்தர் உடல் எடையை குறைக்க வேண்டும் என மகாலட்சுமி கூறியதால் தினமும் வேக வைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வருவதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டு உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க