Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த கையோடு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்…. ஊரே அண்ணாந்து பார்த்த சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரேஷ் கேதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் 2 மகள்களையும் சுரேஷ் கேதர் டாக்டருக்கு படிக்க வைத்து இருவரையும் ஆயுர்வேத டாக்டராக்கியுள்ளார்.

இந்நிலையில் 2 மகள்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசை இருந்துள்ளது. ஆனால் பொருளாதார வசதி காரணமாக இது நடைபெறாமல் இருந்தது. தற்போது தன் மகள்கள் பூனம் கேதர், பிரியங்கா கேதர் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை சுரேஷ் கேதர் செய்தார்.

இதையடுத்து திருமணம் முடித்து தன் மணமகன் வீட்டிற்கு செல்லும் போது தனது மகள்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல சுரேஷ் கேதர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அவர்கள் திருமணம் முடித்துவிட்டு தங்கள் கணவர் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இவர்கள் செல்வதை ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்து ரசித்தனர் .

Categories

Tech |