நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த வீடியோவைப் பகிர்ந்தர். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானது. இவர்களுடைய திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் இரவு 12 மணி அளவில் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட ஆதி, எங்கள் நலம்விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது உண்மையிலேயே நாங்கள் என்றென்றும் போற்றும் ஒரு தருணம். இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும் போது உங்கள் ஆசீர்வாதத்தையும், அன்பையும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.