கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக திருமண அழைப்பிதழ் போன்ற வித்தியாசமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும். வாக்களிக்கும் வைபோகம் என்ற தலைப்பில் திருமண அழைப்பிதழ் போல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதில் தேர்தல் நடைபெறும் நாள், 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அன்பளிப்பு பெற்று வாக்களிக்க கூடாது என்பதை கருதும் வகையில் இந்த விளம்பர பலகை இருந்தது . வித்தியாசமான முறையில் இருக்கும் விளம்பரப் பலகையை தாசில்தார் அலுவலகத்தில் அனைவரும் பார்த்து செல்கின்றனர்.