தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பாரதிநகரில் விவசாயியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டாம் என பிரியங்காவிடம் தெரிவித்தனர். மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
கடந்த 24-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரியங்காவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.