திருமணம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-யசோதா தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என்ற மகள்கள் இருந்தனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்புடன் பாசத்துடன் இருந்து வந்தனர். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் பணியை தொடங்கினர். ஆனால் இரட்டை சகோதரிகளுக்கு திருமணம் செய்து கொண்டால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சம் எழுந்ததால் திருமணத்தில் ஈடுபாடு இல்லை.
இதனால் திருமணத்தை தவிர்க்க இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வெவ்வேறு அறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திருமணம் செய்து கொண்டால் இரட்டை சகோதரிகள் பிரிந்து விடுவார்கள் என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.