வட இந்தியாவில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அக்னி குண்டத்தை நடனமாடிக் கொண்டே சுற்றி வந்தது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வட இந்தியாவில் பெரா என்ற சடங்கு உள்ளது. இது யாகத்தை சுற்றிவரும் ஒரு சடங்கு. அந்த சடங்கின் போது ஒரு தம்பதிகள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிர்லா பிரசியந்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் எம்பியுமான வேதாந்த 27 வினாடி உள்ள அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியா மரபுகளை அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் கடினமான உடையை அணிந்து இருந்த போதும் அந்த விழாவில் ஒரு பாடலுக்கு அக்னி குண்டத்தை சுற்றி நடனமாடிக் கொண்டே வந்தது பெரும் கண்டனத்துக்குரியது என்று அவர் விமர்சித்துள்ளார். இந்த சடங்கானது திருமணத்தில் ஒரு முக்கிய பங்கு என்றும், ஐயர் மந்திரங்களை ஓதும் போது தம்பதிகள் நெருப்பை சுற்றிவர வேண்டும். ஆனால் இதில் மிகவும் வேடிக்கையாக செய்கின்றனர்.
https://twitter.com/birla_vedant/status/1366771588910092288