குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா திருமணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா . இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் முதன்முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலில் தான் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
❤💛Success consists of getting up just one more time than you fall💛❤ pic.twitter.com/g6fnC4dVOT
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) March 28, 2021
தற்போது இவர் இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் . இந்நிலையில் தர்ஷா குப்தா திருமண கோலத்தில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.