சத்தீஷ்காரின் துர்க் மாவட்டத்தில் ராஜேஷ்வரி (35) வசித்து வருகிறார். இவர் பிலாஸ்பூரிலுள்ள ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதனை கவுதம் பாதுரி மற்றும் சஞ்ஜய் அகர்வால் போன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அந்த மனுவில் “இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956 சட்ட பிரிவின் அடிப்படையில் திருமணம் முடியாத மகள் தனது பெற்றோரிடமிருந்து திருமண செலவுகளை பெற அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு முன்பு குடும்ப நீதிமன்றத்தில் இதே வழக்கு சென்ற 2016ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் ராஜேஷ்வரி தன் தந்தை பூனுராம், பிலாய் ஸ்டீல் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு ஓய்வுக்கால பணி பலன்களாக ரூபாய் 55 லட்சம் கிடைக்கும்.
அதன் காரணமாக அந்த ஆலையின் உரிமையாளர், தந்தையின் ஓய்வு கால பணி பலன்களின் ஒரு பகுதியான ரூபாய் 20 லட்சம் தொகையை தனக்கு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் விசாரணையின்போது சென்ற 2016ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ராஜேஷ்வரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனது திருமண செலவு தொகையை பெற்றோரிடமிருந்து மகள் பெறுவதற்காக அந்த சட்டத்தில் பிரிவுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தே ஐகோர்ட்டில் ராஜேஷ்வரி மனு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கை குடும்ப நீதிமன்றம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
1956 சட்டத்தின் பிரிவு 3(பி) (ii) போன்றவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. குடும்ப நீதிமன்றத்தின் முன்பு தொடர்புடைய வாதிகள் வந்து ஆஜராகும்படியும் உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு பெண் திருமணம் ஆகாத போதும் பெற்றோரிடமிருந்து தனக்கான திருமண செலவுகளை இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956 பிரிவுகளின் கீழ் உரிமை கோர முடியும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முடிவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று ஐகோர்ட்டு அமர்வு பரிசீலித்து இருக்கிறது. இவ்வழக்கானது அனைத்து சட்ட புத்தகங்களிலும் இடம்பெறும் எனவும் ராஜேஷ்வரியின் வழக்கறிஞர் திவாரி தெரிவித்துள்ளார்.