கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் கூலித்தொழிலாளியான சீனிவாசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் மகளான கல்பனா(25) என்பவர் பண்ருட்டியை சேர்ந்த தினேஷ்(27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்பனாவின் பெற்றோர் அவரை கடந்த 2012-ஆம் ஆண்டு சீனிவாசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு கல்பனா தினேஷுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சீனிவாசன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கள்ளக்காதலனுடன் இணைந்து கல்பனா தினேஷை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி திருமண நாளை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லலாம் என கூறி கடந்த 2013-ஆம் ஆண்டு கல்பனா சீனிவாசனை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து ராசாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த தினேஷும், அவரது நண்பர் முரளியும் இணைந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை அடுத்து நகைக்காக கொலை நடந்தது போல கல்பனா அனைவரிடமும் நாடகமாடியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கல்பனா தினேஷுடன் இணைந்து தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த கடலூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் கல்பனா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் கல்பனாவுக்கு 4000 ரூபாய் அபராதமும், தினேஷுக்கு 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் முரளி சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.