Categories
மாவட்ட செய்திகள்

திருமண நாளில்…. “காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்”….. போலீசார் அதிரடி…!!!!!

காதல் மனைவியை திருமண நாளில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்த அருள் என்பவர் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்டீபன் ராஜ் என்ற மகனும் மகாரித்திகா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீரியாக பணியாற்றி வருகின்றார். மேலும் மகள் கல்லூரியில் பயின்று வருகிறார்.

அருள் மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்ற எட்டு மாதங்களாக ரேவதி தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். மேலும் அங்கு இருக்கும் துணிக்கடையில் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் 12ஆம் தேதி இருவரின் திருமண நாள். இதனால் அருள் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ரேவதி வீட்டிற்கு சென்று கேட்டிருக்கின்றார். ஆனால் ரேவதி மறுத்து விட்டார். இதை அடுத்து உனது உடைமைகளை தருகிறேன், என்னுடன் வீட்டுக்கு வந்து அவைகளை வாங்கி செல் என அரசு கூறியதால் கணவருடன் வீட்டுக்கு சென்று இருக்கின்றார்.

மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ரேவதியின் தாய் அவரை வந்து அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் காமராஜர் சாலையில் நடந்து கொண்டிருந்த பொழுது அருள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் போராடிய ரேவதியை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருளை கைது செய்தார்கள்.

Categories

Tech |