ராஜஸ்தானை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது அன்பு மனைவிக்காக திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.
உலகில் காதலைப் பற்றிய வர்ணனையில் நிலவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவ்வகையில் ராஜஸ்தானில் தர்மேந்திரா மற்றும் அனிஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் அன்பு மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த காதலால், தங்களின் திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். அந்த நிலத்தை லுணர் சொசைட்டி என்ற அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளது. நிலாவில் சாருக்கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் நிலம் வாங்கியுள்ளனர்.
அங்கு நிலம் வாங்குவது பலரின் லட்சியக் கனவாக உள்ளது. நிலாவில் நிலம் வாங்கிய பிரபலங்களின் வரிசையில் தற்போது தர்மேந்திரா இடம் பெற்றுள்ளார். தனது திருமண நாள் பரிசாக கணவர் நிலாவில் நிலம் வாங்கி கொடுத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார். தன் மனைவிக்காக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்த தர்மேந்திரா அன்பு பாராட்டை பெற்று வருகிறது.