கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் சஞ்சீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷன்(7) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சங்கராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். இந்நிலையில் சஞ்சீவ் காந்தியின் பக்கத்து வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்ஷனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories