Categories
மாநில செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்”…. கோர விபத்தில் சிக்கி பறிபோன 4 உயிர்… பெரும் சோகம்…!!!!!!

ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் அன்னமயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்னும் பகுதியை  சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி, மதுலதா, தேவான்ஸ் ரெட்டி, பூஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். காரை கெங்கி ரெட்டி ஓட்டி இருக்கின்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நான்கு பேரும் காரில் வீட்டுக்கு திரும்பி மதனப்பள்ளி – புங்கனூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி பல அடி தூரம் உருண்டு சென்று உள்ளது. இதில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.  நள்ளிரவு நேரம் விபத்து நடைபெற்றதால் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கார் விபத்தில் சிக்கி இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு நான்கு பேரும் அருகில் சாலையோர பள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். அதன்பின் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |