தொழிலதிபரின் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் தொழிலதிபரான ஆதிகேசவ பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஏஜென்சி நடத்தி வருகிறார் நேற்று ஆதிகேசவ பெருமாள் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆதிகேசவப்பெருமாள் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆதிகேசவப்பெருமாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.