மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரம்பிலாவிளைவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான நாகராஜன், ஜெகதீஷ் ஆகியோருடன் பருத்திக்காட்டுவிளை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இவர்கள் பூச்சிக்காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனை அடுத்து படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.